அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (03) நடைபெற்றது.
காட்டுத்தீயால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் நகரமே உலக இசைக்கலைஞர்களால் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.
இசைக்கு அங்கீகாரம் அளிக்கும் உலக மேடை என்பதால் உலகம் முழுவதிலும் இருந்து விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்கள் கண்களை கொள்ளைகொள்ளும் அலங்காரத்துடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.