“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தில் இன்று (3.02.2025) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டைக்காடு கடற்கரை பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கட்டைக்காடு 522 வது இராணுவ படையணியுடன் இணைந்து மருதங்கேணி 10 வது விஜயபாகு இராணுவ படையணி துப்பரவு பணியை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் 522வது இராணுவ படைமுகாமின் இராணுவ அதிகாரி மற்றும் 10வது விஜயபாகு இராணுவ படையணியின் இராணுவ அதிகாரி, கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை அ.அமல்ராச் ஆகியோர் கலந்து கொண்டனர்.