10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 10 வலம்புரிச் சங்குகளை தனது காரில் மறைத்து வைத்து விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற நபரொருவரை கணேமுல்ல பொலிஸார் இன்று (03) கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத ஒருவர் இந்த வலம்புரிச் சங்குகளை எடுத்துச் சென்று விற்கச் சொன்னதாகவும், அந்தக் கோரிக்கையின் பேரில் அவற்றை விற்க கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
சந்தேகநபர் பயணித்த காரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர் நாளை (04) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.