யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று(01) வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் உதயகுமார் குமாரசாமி அவர்களின் நிதி அனுசரணையில் இயங்கும் சிகரம் கல்வி நிறுவனத்தின் கௌரவிப்பில் சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஒழுங்கமைப்புடன் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் சிகரம் நிறுவனத்தால் நடைபெற்ற நிகழ்வில் சிகரம் நிறுவனத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் சதீஷ், சிகரம் குழுமத்தின் தலைவர் உதயகுமார் பாஸ்கரன், வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், சிகரம் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்விற்கான ஊடக அனுசரணையை தாயகம் Media வழங்கி இருந்தது.