செம்பியன்பற்று வடக்கு கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் இன்று(31) நடைபெற்றது.
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு கிராம அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் செம்பியன்பற்று வடக்கு கடற்றொழிலாளர்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானாது 5 வருடங்களுக்கு பின்பு பல முயற்சிகளால் இன்று நடைபெறுகின்றது என முன்னாள் தலைவரால் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னாள் உறுப்பினர்களால் பொறுப்புக்கள் கிராம உத்தியோகத்தரிடம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொறுப்புக்கள் பற்றி கூறப்பட்டதுடன் புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றன.