யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் வருகையினால் யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.