வடமராட்சி தொண்டைமானாறு யா/கெருடாவில் இந்துதமிழ்க்கலவன் பாடசாலையின் கால்கோல்விழா சிறப்பாக இன்று நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு பாடசாலை முதல்வர் சுதாகரன் தலைமையில் புதிய மாணவர்கள் பான்ட் வாத்தியங்கள் இசைக்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது
பாடசாலை சூழலில் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதுடன் பரிசில்களும் வளங்கி கெளரவிக்கப்பட்டனர்
ADVERTISEMENT
இந்நிகழ்வில் வல்வெட்டித்துறை இலங்கை வங்கி முகாமையாளர் நவகிருஷ்ணராசா பிரதம விருந்தினராகவும்,விவேகானந்தா மற்றும் அம்பிகை முன்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

