வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச் சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப் பாசறையானது இரு தினங்கள் இடம்பெற்றது. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவானந்தர் கஜவதனனின் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறுபட்ட அணுசரணையாளர்களின் பங்களிப்பில் இடம்பெற்ற நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் lt.Col.RHNP Rathnaweera அவர்களினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அமைப்பின் புதிய மைல்கல் ஒன்றாக இது வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.








