ஹட்டனில் இருந்து மவுண்ட் ஜீன் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து குயில் வத்தை பிரதேசத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வட்டவளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட்டவளை போலீசார் தெரிவித்தனர்.
இவ்விபத்து ஹட்டன் கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் குயில் வைத்த பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகாமையில் இன்று காலை இடம் பெற்றுள்ளது என வட்டவளை போலீசார் தெரிவித்தனர்.
அதிவேகமாக சென்றதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என வட்டவளை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து சம்பந்தமான விசாரணைகளை தொடர்ந்து வட்டவளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.