இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன
இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் Y A B M யஹம்பத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தனர்.
அக்கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவிடம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. அங்கு சென்றே இந்திய துணைத்தூதுவர் தலைமையிலான இந்திய தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.