கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடோன்றில் இருந்து பல லட்சங்கள் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் தொடர்பிலான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.
சிசிடிவி புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் மடுல்சீமை பட்டவத்த எஸ்டேட்டில் அப்பெண்ணின் குடும்பம் வசிப்பதாக கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து அங்கு சென்ற பொலிஸாரால் அவரது கணவரும் பிள்ளைகளும் கைது செய்யப்பட்டனர். தான் தேடப்படுவதை அறிந்த அப்பெண் கொழும்பிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ தப்பிச் சென்று விட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
ஆனந்தஜோதி என்ற பெயருடைய இப்பெண் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருப்பதோடு பிணையில் வெளிவந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இப்பெண் தொடர்பிலான தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அல்லது கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் 0769018267.