பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் இன்றையதினம் இரத்தினபுரி மாவட்டத்தில் கரபிஞ்ச, புனித ஜோகிம் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தினை
(T R I ) நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு நிலவுகின்ற குறை நிறைகளை நேரடியாக கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இயந்திர சாதனங்களையும் பார்வையிட்ட அமைச்சர், எதிர்காலத்திலே புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உலக போட்டி சந்தையிலே இலங்கையின் தேயிலை அதிகம் விரும்பத்தக்க நிலையை கொண்டு செல்ல முடியும் எனவும், இலங்கை மொத்த தேசிய உற்பத்தியில் தேயிலை உற்பத்தியில் ஒரு தன்னிறைவை அடைய வேண்டுமாயின் நாங்கள் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளவதன் மூலமே தேயிலை உற்பத்தியின் ஓர் நிலையான அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்ள முடியும் என கலந்து கொண்டிருந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

