சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் 420,000 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்கள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து களுத்துறை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் மதிப்பு 31.5 மில்லியன் ரூபாய் என்று அவர் மேலும் கூறினார்.