மொனராகலை, செவனகல பகுதியில் மின்சாரத் தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஊழியர்கள் மின்சாரத் தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஒரு ஊழியர் ஒரு மின் கம்பத்தின் மேல் நின்று மின் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, அந்தக் தூணின் நடுப்பகுதி உடைந்து தரையில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

