Forum for Rural Income and Environmental Development Services நிறுவனத்தின் தலைவர் மற்றும் சன்மார்க்கா அமைப்பின் நிறுவுனர் வடமராட்சி கிழக்கிற்கு விஜயம்
சன்மார்க்க அமைப்பின் நிறுவுனர் பகீரதன் மற்றும் Forum for Rural Income and Environmental Development Services நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் போக்கறுப்பு, முள்ளியான்,வெற்றிலைக்கேணி ஆகிய 3 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய கேவில், வேதகுளம், நித்தியவெட்டை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களின் சுயதொழில்களை கண்காணித்தனர்.
சுயதொழில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் குறிப்பிட்ட ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் ஆரம்ப கட்டமாக 25-30 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் தொழில்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு நன்கொடையாக ரூ.20000 ம் வட்டியில்லா கடன் தொகையாக ரூ.25000 ம் வழங்கப்பட்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.