வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும்
பாரம்பரிய பொருட் கண்காட்சியும், பொங்கல் திருவிழாவும் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் திருமதி ஞானமதி மோகனதாஸ் அவர்களின் வழிகாட்டலில் விபுலானந்தா கல்லூரியின் ஆரம்ப பிரிவு அதிபர் சி.தர்சன் அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது 1- 5 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்கள் பாராம்பரிய முறைப்படி 21 பானைகளில் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கலிட்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதன்போது தமிழர் பாரம்பரிய பாக்குவெட்டி, மண்குடம், சத்தகம், அரிக்கன், குதிரை வண்டி, விளக்கு, நீத்துப் பெட்டி, பனங்கட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் காட்சிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


