ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்கள் இன்றைய தினம் கிளைச்சி முறைப்புப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி தொட்டியினை பார்வையிட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் தொட்டி தற்பொழுது கைவிடப்பட்ட நிலையில் காட்டு பற்றைகளாக காணப்படுவதாகவும் இந்த மீன் தொட்டிகளை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வந்து நன்னீர் மீன்பிடி வளர்ப்பின் மூலம் பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அத்தோடு தற்போது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற ஆனையிறவு ரசாயன தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பள கூட்டுதாபனம் ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை என கைவிடப்பட்ட பல தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கும் பலரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.




