யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA613 நைஜீரியாவின் லாகோஸில் இருந்து அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரநிலை உணர்ந்த விமானி விமானத்தை மீண்டும் லாகோஸில் உள்ள முர்தலா முகமது(எம்எம்ஐஏ) சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பினார். அறிக்கைகளின்படி, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திடீரென விமானம் செங்குத்தாக கீழே நோக்கி பறக்க துவங்கியதால் விமானத்தின் உட்பகுதியில் இருந்த பொருட்கள் மற்றும் பயணிகள் அங்கும் இங்கும் மோதி கொண்டனர். இதன் காரணமாக பல பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது. அதில் குறிப்பாக 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தாக்கம் காரணமாக தலையில் அடிபட்டதாகவும், தற்காலிகமாக சுயநினைவை இழந்ததாகவும் ஒரு பயணி விவரித்தார். போயிங் 787-8 ரக விமானத்தில் 245 பயணிகள், எட்டு விமான பணிப்பெண்கள் மற்றும் மூன்று விமானிகள் உட்பட 256 பேர் இருந்தனர்.