யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்கள் மற்றும் வரைவை ஒழுங்காக கடைப்பிடிக்கும் கிளைகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் இன்றைய தினம் (22.01.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஆனி மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் மாதம் வரையிலான காலப்பகுதியில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்களுக்கே சான்றிதழ்கள் வங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்படி காலப்பகுதியில் காலை 08.30 மணிக்கு முன்னர் 100% உத்தியோகத்தர்களின் வரவை ஒழுங்காக கடைப்பிடித்த கிளைகளின் தலைவர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.