கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
உடரட்ட மெனிகே ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயணித்த இந்திய பிரஜையின் பொதி, இகுரு ஓயா மற்றும் கலபட ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாமல் போயுள்ளது. இதுதொடர்பில், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த இந்திய பயணி முறையிட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள், காணாமல் போன இந்திய பிரஜையின் பயணப்பொதியுடன் சந்தேக நபரை கைது செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர், மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், அவர் கண்டியிலிருந்து ஹட்டனுக்கு ரயிலில் பயணிக்க அனுமதிச் சீட்டைப் பெற்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.