தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், சூரியவெவை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.
ADVERTISEMENT
மேற்படி நபர் தேங்காய் வியாபாரி என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.