ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட முகாமையாளரால் மாளிகை பகுதி மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்த ஆபத்து நிறைந்த பெறுமதி வாய்ந்த மரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெட்டப்பட்டது. அவ்வாறு வெட்டப்பட்ட மரங்கள் மிகவும் பெறுமதி மிக்க (கருப்பந்தையிலம்) டேப்பன் டைன் ஆகும். குறித்த மரங்கள் வெட்டிய இடத்தில் போடப்பட்டு உள்ளதால் சில காலங்களில் உக்கி போகும் நிலை தோன்றியுள்ளது.
தோட்ட நிர்வாகம் வெட்டிய மரங்களை பலகைக்காக விற்பனை செய்து இருக்கலாம் அல்லது தொழிலாளருக்கு விறகுக்காக வழங்கி இருக்கலாம். அதனை விடுத்து குறித்த மரங்கள் வெட்டிய இடத்தில் போடப்பட்டு உள்ளதால் சில காலங்களில் உக்கி போகும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் உடன் கவனம் செலுத்தி அவற்றை மரக் கூட்டு தாபனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.