வடமராட்சி வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று 21.01.2025 சற்றுமுன் கரையொதுங்கியுள்ளது.
கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் போன்றன கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.