கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் உறவினர் வீட்டில் நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் பகுதியில் கடந்த 05.01.2025 அன்று தனது உறவினர் வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை நபர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாத பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது 12.01.2025 அன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து வெறுமனே 8 பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டுள்ளதாகவும் களவாடப்பட்டதில் மிகுதி நகைகளை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட தடையப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்திய பின்னர், சந்தேக நபர் 14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.