திவுலபிட்டிய நகருக்கு அருகில் 7 கஜமுத்துக்களுடன் நேற்று (19) பிற்பகல் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர்களிடமிருந்து சுமார் 13 கிராம் 5 மில்லிகிராம் நிறையுடைய 7 கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 2 கோடியே 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 மற்றும் 33 வயதுடைய மாத்தளை மற்றும் மஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.