கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறியும் நோக்குடன், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், பிரதேச மக்களின் வாழ்வாதாரத் தேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனப் பிரச்சனைகள், விவசாயம் தொடர்பான அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி நேரடியாக மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் தன்னுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.