யாழ்ப்பாணத்தில் திமிங்கல வாந்தியை (அம்பரை) உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான ஒருவரே குருநகர் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 465 கிராம் அம்பர் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், அதன் பெறுமதி சுமார் 20 லட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.