அரசியல்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்! இன்று காலை நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் கையெழுத்துப் பெறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப்்போராளிகள் கட்சியின் தலைவர் வே.வேந்தன் ஆகியோரும் கலந்து கையெழுத்திட்டதுடன்்ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.
புதிய அரசின் நீதி அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் அரசியல்க் கைதிகள் யாரும் சிறைகளில் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் இது அப்பட்டமான பொய்யுரைக்கும் அமைச்சர்.
தேர்தல் காலத்தில் அனுரகுமார திஸநாயக்கா்வவுனியாவில்்இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் அரசியலக் கைதிகளை எமது ஆட்சியில் விடுவிப்போம் என்று உரைத்திருந்தார்.