திருக்கோ T20 லீக் 2025-ல் மூன்றாவது பருவத்துக்கான ஆரம்ப நிகழ்வு இன்று திருக்கோணமலை மக்கேய்சர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த பருவத்தில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் 2025 ஆம் ஆண்டின் இன்று தொடக்கம் (18,) 19, 24, 25 மற்றும் பிப்ரவரி 01, 02 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
திருக்கோ சூப்பர் 40 கிரிக்கெட் கிளப் இந்த போட்டியை ஒழுங்கமைக்கின்றது. இந்த லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 12 அணிகள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, வெற்றிக்காக போட்டியிடும்.
இந்த T20 லீக், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இளம் வீரர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும். அவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய அணிகளில் விளையாட வாய்ப்பு பெறலாம்.
இந்த நிகழ்வில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவினை வழங்கலாம். திருக்கோ T20 லீக் 2025, கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியமான நிகழ்வாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கருத்து தெரிவிக்கையில் விளையாட்டு என்பது விரும்பியபடி ஆடுவது என்பது தான் பொருள்படும் அன்றைய காலத்தில் 56 விளையாட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்ட வீரர்கள் மாவட்ட மாகாண தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பிக் போட்டி வரை தங்களது வெற்றிகளை நிலை நாட்ட வேண்டும் இதற்காக சகல உதவி ஒத்தாசைகளையும் வழங்குவேன். விளையாட்டு மூலம் உடற்பயிற்சி உற்சாகம் என்பனவும் உடலுக்கு ஏற்படுகிறது இதனை திறம்பட பயன்படுத்தி காட்ட வேண்டும் என்றார்.