இலங்கை கடற்படையின் வெற்றிலைக்கேணி கடற்படை தலைமையகம் வடமராட்சி கிழக்கு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கை கடற்படையின் ஏற்பாட்டில் இலவச பல் மருத்துவ முகாம் ஒன்று வரும் 23ம் திகதி(23.01.2025) இடம்பெறவுள்ளதால் அனைவரையும் வருகை தந்து பயன்பெறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பல் மருத்துவ முகாம் வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 23ம் திகதி முற்பகல் 09.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.