ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போரிட்ட 12 இந்தியர்கள் உயிரிழந்ததாக இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் 126 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வந்ததாகவும் அதில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளதுடன் 18 இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தில் உள்ளதுடன் உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.