வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் இயக்கச்சி அபாயவெளி பாதையின் இரு மருங்கிலும் காணப்பட்ட சிலமரங்கள் இன்று 17.01.2025 வெட்டப்பட்டுள்ளன
கொடுக்குளாய் இயக்கச்சி பாதை உடைப்பெடுத்து வரும் நிலையில் இரு மருங்கிலும் காணப்பட்ட மரங்களை அழித்தமையே காரணம் என்று மக்களால் குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் காணப்படும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது
இதனால் அபாயவெளி பாதை உடைப்பெடுக்கும் நிலை காணப்படுவதால் அந்த வீதியால் பயணிக்க முடியாத நிலை உருவாகும்
அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான உழவு இயந்திரம் மூலம் மரங்கள் வெட்டி ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டமையை கண்டு பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.