இலங்கைத் தயாரிப்பான “மில்கோ – ஹைலண்ட் பால்மா” உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் “ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.