சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிதாக அமைக்கப்பட்ட முன்பள்ளியின் கட்டடத்தினை நாடவை வெட்டி திறந்து வைத்தார்.
இதன்போது குறித்த கிராமத்தில் சாதாரண பரீட்சை தெரிந்த மாணவர்கள் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களாகியோர் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் வலிகாமம் வடக்கின் முன்னாள் பிரதேச சபை செயலாளர் சுகிர்தன் தெல்லிப்பளை உதவி பிரதேச செயலாளர் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசியம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் நமக்குள் இருந்த சில முரண்பாடு காரணமாக கடந்த தேர்தலில் புதிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கணிசமான வாக்கு கிடைத்தமையால் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் அதனால் தான் மக்கள் தேசியத்தை விடுத்து
எமக்கு வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.