யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் இன்று(15) காலை 11.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த காரியாலயத்தை கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உட்பட்டோர் திறந்து வைத்தார்.
அத்துடன் கட்சியின் பிரதேச இணைப்பாளர் மாடசாமி செல்வராசா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் சமாச தலைவர், பிரதேச கடற்றொழில் சங்க உறுப்பினர்கள், மருதங்கேணி இலங்கை வங்கி முகாமையாளர், உட்பட கட்சியின் பிரதேச ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.