அதிக பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து வைத்து சீனாவுக்கு கொண்டு செல்ல முயன்ற சீனாவைச் சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு தந்தைக்கு 45 வயது, மகளுக்கு 21 வயது. அவர்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கான வதிவிட விசாவைப் பெற்று இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று (13) இரவு 07.30 மணியளவில் சீனாவின் சோங்கிங் நோக்கிப் புறப்பட்ட சோங்கிங் எயார்லைன்ஸ் OC-2394 என்ற விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்களின் உடல்களை ஸ்கேன் டெஸ்ட் மூலம் பரிசோதித்தபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த ரத்தினக் கற்கள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.