சீரற்ற காலநிலை காரணமாக நெடுங்கேணி ஒலுமடு வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நள்ளிரவிலிருந்து காற்று மற்றும் மழையுடனான வானிலை நிலவுவதால் நெடுங்கேணியிலிருந்து ஒலுமடு ஊடாகச் செல்லும், கூழாங்குள வீதியில் சேனைப்புலவுச் சந்தியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததினால் போக்குவரத்துக்கள் அனைத்தும் முழுமையாகத் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.