மின்னேரியா, ரஜஎல – மஹாசென மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார் என்று மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதிலக பண்டார ராஜபக்ஷ வாசல அதபத்து முதியன்செல ராலஹாமி சுனில் பண்டாரநாயக்க என்ற 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டின் பின் பகுதிக்குச் சென்றபோது, யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.