ஒளவையாரின் நினைவு தினம் வவுனியா, சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையாரின் சிலையடியில் இன்று இடம்பெற்றது.
இதன்போது ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலியும் செய்யப்பட்டது.
தமிழ்மணி அகளங்கன் மற்றும் மாணவர்கள் நினைவுப் பேருரைகள் ஆற்றினார்கள்.
ADVERTISEMENT
வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



