யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலில் சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 23, 20 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.