கணபதி அறக்கட்டளை நான்காம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்றையதினம் மாலை சந்தி பிள்ளையார் திருமண மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கணபதி அறக்கட்டளை நிர்வாகியும். ஸ்தாபகருமான கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து கருத்துரைகள் நிகழ்வின் விருந்தினர்களால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சாதனையாளர்கள் கௌரவிப்பு வரிசையிலே வெளிநாட்டில் நடைபெற்ற 19 வயது பிரிவின் கீழ் துடுப்பாட்டத்தில் சாதனை படைத்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வன் விக்கனேஸ்வரன் ஆகாஸ் அவர்களுக்கு தங்க மகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 2 மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இதேவேளை 2024 ஆண்டில் கல்வி மருத்துவம், வாழ்வாதார உதவியாக இரண்டு கோடியே 80 இலட்சம் பெறுமதியான உதவி திட்டங்கள் இந்த அறக்கட்டளையால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கணபதி அறக்கட்டளைகள் நிறுவன நிர்வாகிகள், பயனாளிகள், பிரதேச செயலகங்களின் உத்தியோகஸ்தர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.