மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது.
தை திருநாள் வியாபாரம் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது.கடுமையான குளிரானா காலநிலை தோன்றியுள்ளது.
ஏ 7 வீதி நோட்டன் மஸ்கெலியா வீதி, மஸ்கெலியா ஹட்டன் வீதியில் அதிக அளவில் பணி மூட்டம் காணப் படுகிறது இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டு கொள்கின்றனர்.
சிவனடி பாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பருவகாலம் ஆரம்பிக்க பட்ட காலத்தில் இந்த விடுமுறை காலத்தில் அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு வரும் யாத்திரிகர்கள் சொந்த வாகனம் மற்றும் தனியார் பேருந்து மூலமாகவும் ஹட்டன் வழியாக அரச பேருந்து புகையிரத வழியாக வருகின்றனர்.
நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிரம்பிய நிலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் நிறுத்தி வைக்க நல்லதண்ணி பொலிஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
கனத்த மழையுடனான காலநிலையிளும் யாத்திரிகர்கள் வருகை அதிகரித்து உள்ளது. சிவனடி பாத மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் நீர் வரத்து உள்ளதால் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் என பொலிசார் தெரிவித்து வருகின்றனர்.