தென் கொரியாவில் E8 விசா பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 05 முறைப்பாடுகளின் பிரகாரம், அந்த பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
தென்கொரியாவில் E8 விசா பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி, அவர் புகார் அளித்தவர்களிடம் கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (12) பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.