வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரத்தில் நேற்றையதினம் (10) வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சுழிபுரம் – பெரியபுலோ பகுதியில் வாளுடன் 17 வயது மாணவன் ஒருவனும், சுழிபுரம் – வறுத்தோலை பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.