காத்தான்குடி ஆரையம்பதி செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் உந்துருளியில் பயணித்த இருவரும், முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.