2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த புதன்கிழமை (8) ஆரம்பிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இதன்போது, 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அவர்களில், 79,787 மாணவர்கள் தமிழ் மொழியிலும், 244,092 மாணவர்கள் சிங்கள மொழியிலும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.