ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களால்தான் பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
எனவே, சுதந்திரக்கட்சி என்ற தாய்வீட்டில் கதவுகள் திறந்தே உள்ளன. கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வரலாம்.
சுதந்திரக் கட்சியின் வாக்குகள்தான் தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளது.
தற்போது அரசியல் என்பது நாடாளுமன்றத்தில் இல்லை. அதற்கு வெளியில்தான் உள்ளது.
எனவே, நாடாளுமன்றத்துக்கு வெளியில் சமூகத்தை அணிதிரண்ட சுதந்திரக்கட்சி தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.