ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 20 T-56 ரக துப்பாக்கிகளை கடந்த 2024ஆம் ஆண்டில் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை மற்றும் பிற காவல் பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளின் போது இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், அதே காலகட்டத்தில் 37 கைத்துப்பாக்கிகள் மற்றும் 36 ரிவால்வர்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.