காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று வியாழக்கிழமை (09) காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிவப்பு நிற உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் “லொகு பெடி” என்ற பாதாள உலகக்குழு உறுப்பினரின் உறவினர் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து , சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.