தனது மாமனாரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.